×

சில்லிபாயின்ட்…

* கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் கால்பந்து பைனலில் மணிப்பூர் – மேற்கு வங்கம் அணிகள் நேற்று மோதின. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த இப்போட்டியில் மணிப்பூர் 8-7 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

* ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்காக இடை நிறுத்தப்பட்டிருந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடர் ஆட்டங்கள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன. ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெறும் போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்சி – நார்த்ஈஸ்ட் யுனைடட் எப்சி அணிகள் மோதுகின்றன. ஆட்டம் தொடங்கும் நேரம் இரவு 8.00 மணிக்கு பதிலாக இரவு 7.30 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெறும்போது மாலையில் தொடங்கும் ஆட்டத்தின் நேரம் மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 5.00 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

* ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஆண்கள் ஐவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடக்கிறது. பி பிரிவில் 2வது இடம் பிடித்த இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் நெதர்லாந்திடம் 7-4 என்ற கோல் கணக்கில் தோற்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதையடுத்து 5-8வது இடங்களுக்கான ஆட்டங்களில் இந்தியா விளையாடுகிறது.

The post சில்லிபாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Manipur ,West Bengal ,Gallo India Youth Sports Tournament ,Nehru Sports Arena ,Chennai ,Silly ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!